 )
Tue Oct 29 17:18:30 UTC 2024: ## பென்னி ஸ்டாக் பங்கு மதிப்பு ரூ. 1.2 லட்சம் : MRF பங்குகளை முந்திய எல்சிட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட்
**மும்பை:** இந்தியப் பங்குச் சந்தையில், MRF லிமிடெட் தான் அதிக விலையுள்ள பங்குகள் என்று நீங்கள் நம்பினால், அது தவறு என்று நிரூபித்துள்ள வேறொரு பங்கு. சுமார் ரூ. 1.2 லட்சம் மதிப்புள்ள பங்குகளை கொண்ட டயர் தயாரிப்பாளரின் பங்குகள் ஒரு மைக்ரோகேப் பிளேயரால் சிறிதாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, MRF ஐ வீழ்த்திய அந்த பங்கு இன்று செவ்வாய் கிழமை பங்குச்சந்தை நிலவரப்படி இருமடங்காக உயர்ந்துள்ளது.
சுவாரஸ்யமாக, இந்த பங்கு இந்த ஆண்டு ஜூலையில் ரூ.3.21 மதிப்புள்ள ஒரு பென்னி ஸ்டாகாக இருந்தது. எல்சிட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட், என்ற அந்த பங்கு தான் இன்று செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 29 அன்று பிஎஸ்இயில் மீண்டும் பட்டியலிடப்பட்டது. அதன் நியாயமான மதிப்பு ரூ. 2,25,000 என்ற அளவை இன்று சந்தையில் தொட்டது. ஆனால் அந்த பங்கு மற்றொரு 5 சதவீதம் உயர்ந்து இன்று நாள் இறுதியில் ரூ. 2,36,250 ஆக இருந்தது. இதன் மொத்த சந்தை மூலதனம் கிட்டத்தட்ட ரூ.4,800 கோடியாம்.
எல்சிட் இன்வெஸ்ட்மென்ட்ஸின் விளம்பரதாரர்கள் இன்று தானாக முன்வந்து ஒரு பங்கின் அடிப்படை விலையான ரூ. 1,61,023க்கு, அதன் பட்டியலிலிருந்து நீக்குவதற்கான வாய்ப்பை வழங்கினர். இருப்பினும், தேவையான பெரும்பான்மையான பொது பங்குதாரர்கள் குறிப்பிட்ட வரம்பை பெறாததால் அந்த தீர்மானம் தோல்வியடைந்தது.
எல்சிட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் சுமார் 2,00,000 பங்கு மூலதனத்துடன், 2,83,13,860 ஈக்விட்டி பங்குகளை, (அல்லது) ஏசியன் பெயிண்ட்ஸ் லிமிடெட்டில் 2.95 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. இது அதன் முந்தைய முடிவின்படி கிட்டத்தட்ட ரூ.8,500 கோடி மதிப்புடையது.
இது போன்ற குறுகிய காலத்தில் அதிக அளவில் உயரும் நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு முன், அந்த நிறுவனத்தின் பணப்புழக்கங்கள் மற்றும் அந்த நிறுவனம் மேற்கொள்ளும் வணிகத்தின் தன்மையைப் பார்க்க வேண்டும்.