Wed Oct 16 11:43:25 UTC 2024: ## கனமழை எச்சரிக்கை: திருவண்ணாமலை கிரிவலம் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் புரட்டாசி மாத பவுர்ணமி (17.10.2024) கிரிவலத்திற்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை (Heavy to Very heavy rainfall – Orange Alert) இருக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மழையினால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் கிரிவலம் வருவதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பக்தர்கள் தங்கள் பயண திட்டங்களை மழைப் பொழிவினை பொறுத்து மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மழை பாதிப்புகள் தொடர்பான தகவல்களை 1077, 04175-232377 என்ற தொலை பேசி எண்களிலும், மின்சாரம் தொடர்பான பாதிப்புகள் 94987 94987 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.