Tue Oct 15 18:27:07 UTC 2024: ## இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளை 73 ஓட்டங்களால் வீழ்த்தியது

**தம்புள்ளை, இலங்கை:** இன்று இரவு நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் தனது சுழல் பந்துவீச்சாளர்களைக் கொண்டு மேற்கிந்தியத் தீவுகளை திணறச் செய்த இலங்கை அணி 73 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை 1 – 1 என இலங்கை சமப்படுத்தியது. இடதுகை சுழல் பந்துவீச்சாளர் துனித் வெல்லாலகே தனது ரி20 அறிமுகப் போட்டியில் முன்வரிசை வீரர்கள் மூவரின் விக்கெட்களைக் கைப்பற்றி மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஆட்டங்காணச் செய்தார்.

அவருக்கு பக்கபலமாக செயற்பட்ட மற்றைய சுழல்பந்துவீச்சாளர்களான அணித் தலைவர் சரித் அசலன்க, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன ஆகியோர் 6 விக்கெட்களைப் பகிர்ந்தனர். வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பத்திரண எஞ்சிய விக்கெட்டைக் கைப்பற்ற மேற்கிந்தியத் தீவுகள் இரட்டை இலக்க மொத்த எண்ணிக்கைக்கு சுருண்டது.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 163 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 16.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 89 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இன்றைய போட்டியில் தனது 54 ஓட்டங்களுடன் பெத்தும் நிஸ்ஸன்க ஆட்டநாயகனாகத் தெரிவானார்.

Read More