Thu Oct 10 21:32:46 IST 2024: ## முதல்வர் ஸ்டாலின் கண்ணீர் அஞ்சலி: முரசொலி செல்வம் உடலுக்கு இறுதி மரியாதை

சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம் (84) வியாழக்கிழமை அதிகாலை காலமானார். பெங்களூரு மருத்துவமனையில் இருந்து சென்னை கோபாலபுர இல்லத்துக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல், கட்சித் தொண்டர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்தில் சென்று, முரசொலி செல்வத்தின் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் ஸ்டாலின், முரசொலி செல்வம் மறைவைத் தொடர்பாக வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More