Fri Oct 04 18:49:06 UTC 2024: ## தில்லி காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேவேந்தர் யாதவ், அரவிந்த் கேஜரிவால் மற்றும் மனீஷ் சிசோடியா ஆகியோர் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட எம்பி-க்கள் குடியிருப்புகளை ஆக்கிரமித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேவேந்தர் யாதவ், கலால் கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கேஜரிவால் மற்றும் மனீஷ் சிசோடியா ஆகியோர் ஆம் ஆத்மி கட்சி எம்பி-க்களின் அதிகாரப்பூர்வ இல்லத்தை ஆக்கிரமித்துள்ளதாக வெள்ளிக்கிழமை விமர்சித்தார்.
“கேஜரிவால் மற்றும் மனீஷ் சிசோடியா இருவரும் அதிகார சுகபோகத்திற்கு மிகவும் பழகிவிட்டனர். தலைநகரின் ஆடம்பரமான பகுதிகளில் தங்க விரும்புகிறார்கள். கலால் கொள்கை ஊழல் வழக்கில் இன்னும் விசாரணையை எதிர்கொண்டாலும், அதிகாரத்தின்கடிவாளத்திற்கு இவர்கள் ஆசைப்படுகிறார்கள்,” என்றார் யாதவ்.
கேஜரிவால் தனது சட்டப்பேரவைத் தொகுதியில் தங்க விரும்புவதாகக் ஆம் ஆத்மி கட்சி கூறியது வெறும் அரசியல் நாடகம் என்றும், தில்லி மக்கள் வெளிப்படையான மற்றும் நேர்மையான அரசை நடத்த ஆம் ஆத்மி கட்சியை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், கேஜரிவால் மற்றும் மனீஷ் சிசோடியா சாமானிய மக்களை தவறாக வழிநடத்தி, தங்கள் கறைபடிந்த முகத்தை துடைக்க முயற்சிக்கின்றனா் என்றும் கூறினார்.
கடந்தாண்டு அக்டோபா் 11-ஆம் தேதி முதல் பேருந்து மாா்ஷல்களின் சேவையை நிறுத்தி, லட்சக்கணக்கான இளைஞர்களை வேலையில்லாமல் ஆக்குவதற்கு கேஜரிவால் காரணமாக இருந்தாா். ஆனால், இப்போது அவர்களை மீண்டும் பணியில் அமா்த்துவதற்காக கேஜரிவாலே முதலைக் கண்ணீா் வடிக்கிறாா். தில்லியில் ஆட்சிக்கு வருவதற்கு முன், கேஜரிவால் ஆசிரியர்கள் உள்பட அனைத்து தற்காலிக ஊழியா்களின் சேவைகளையும் முறைப்படுத்துவதாக உறுதியளித்தாா். ஆனால், அதற்கான எந்தவொரு முயற்சியும் அவர் எடுக்கவில்லை என்றும் யாதவ் குற்றம் சாட்டினார்.