![]()
Mon Nov 11 20:09:25 UTC 2024: ## சக்திமான் திரும்ப வருகிறார்! 90’ஸ் கிட்ஸ்களின் மனதில் இடம் பிடித்த சூப்பர் ஹீரோ மீண்டும்
**நியூ டெல்லி:** 90’ஸ் கிட்ஸ்களின் மனதில் இடம் பிடித்த இந்திய சூப்பர் ஹீரோ சக்திமான் மீண்டும் திரும்பி வருகிறார்! சக்திமானாக நடித்த நடிகர் முகேஷ் கன்னா, சமீபத்தில் சமூக ஊடகத்தில் வெளியிட்ட டீஸரில் இந்த செய்தியை அறிவித்துள்ளார்.
“இன்றைய குழந்தைகள் மீது இருளும் தீமையும் மேலோங்கி வருவதால், சக்திமான் திரும்பும் நேரம் இது அமைகிறது” என்று முகேஷ் கன்னா டீஸரில் கூறியுள்ளார். இதில், சக்திமான், பள்ளிக்குள் தனது ஸ்டைலில் சுழன்று, சுதந்திர போராட்ட தியாகிகளான சந்திரசேகர் அசாத், பகத் சிங், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரை பார்த்து பாடல் பாடுகிறார்.
சக்திமான் மீண்டும் வருவது குறித்த இந்த அறிவிப்பு, சமூக ஊடகங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்கள் குழந்தை பருவ ஹீரோவை மீண்டும் பார்க்க ஆர்வமாக உள்ளதாகவும், இந்தத் தொடர் தங்களுக்கு இனிமையான நினைவுகளைத் தரும் என்றும் தெரிவித்து வருகிறார்கள்.
சக்திமான் தொடர் எப்போது, எந்த டிவியில் அல்லது ஓடிடியில் வெளியாகும், வெப்சீரிஸ் ஆக வருகிறதா அல்லது நெடுந்தொடராக வருகிறதா, யாரெல்லாம் நடிகர், நடிகைகள் என்பன குறித்த தகவல் எதுவும் இன்னும் தெரியவில்லை.
1997 முதல் தூர்தர்ஷன் டிவியில் ஒளிபரப்பான சக்திமான் தொடர், சுமார் 450 எபிசோடுகளுக்கு மேல் 8 ஆண்டு காலம் வரை ஒளிபரப்பானது. சக்திமான் கதாபாத்திரம் சூப்பர் ஹீரோவாக, மாய மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளை கொண்டிருப்பதாகவும், துறவிகள் உருவாக்கப்பட்டும் பூமியில் நிலவும் தீமைக்கு எதிராக போராடும் விதமாக அமைந்திருக்கும்.
சக்திமான் சீரியல் வந்த புதிதில், அந்த கதாபாத்திரம் அணியும் மெரூன் நிறத்திலான வெல்வட் துணியுடன் கூடிய டிர்ஸ் மிகவும் பிரபலமாக இருந்தது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அந்த ஆடையை வாங்கி அணிவித்து மகிழ்வித்தார்கள்.
தற்போது அந்த விண்டேஜ் உடையுடன் சக்திமானின் புதிய டீஸர், குறிப்பாக 90’ஸ் கிட்ஸ்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.